மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி போடுகிறாரா..? இந்த இளம் நடிகை .!

Priyanka Arul Mohan, the heroine of the movie Doctor, is said to be starring in the upcoming Don movie starring Sivakarthikeyan.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவிருக்கும் டான் படத்தில் டாக்டர் பட ஹீரோயினான பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.இவரது நடிப்பில் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்கள் உருவாகியுள்ளது.தற்போது இரு படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.இதனிடையே அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது .அதாவது அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தினை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது .

இந்த நிலையில் டான் படத்தின் ஹீரோயின் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன .அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்து வருவதும் ,டான் படத்தில் நடிக்கிறார் என்றால் அது பிரியங்கா அருள் மோகனின் சிவகார்த்திகேயன் உடனான இரண்டாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.