மாரி செல்வராஜ் படத்தில் துருவ் விக்ரமின் கேரக்டர் இதுதானா.? எகிறும் எதிர்பார்ப்பு.!

It is said that Dhruv Vikram will play a kabaddi player in the film directed by Mari Selvaraj.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தில் கபடி வீரராக துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துருவ் விக்ரம்.அதன் மூலம் அதிக பெண் ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தந்தையான விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.அதன் பின் இவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அப்டேட் நேற்று வெளியாகியது .

பரியெறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும் ,அதனை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலிம் புரொடக்ஷன் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது . தற்போது இந்த படத்தில் துருவ் விக்ரமின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது விளையாட்டு சம்மந்தமாக உருவாகும் இந்த படத்தில் கிராமப்புறத்தை சேர்ந்த ஒரு தமிழ்நாட்டு கபடி வீரராக துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவலால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.