7ஜி ரெயின்போ காலனி படத்தில் இந்த நடிகையும் இருக்கிறாரா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஆகியோர் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 7ஜி ரேம்போ காலனி. இந்த

7G Rainbow Colony kajal agarwal

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஆகியோர் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 7ஜி ரேம்போ காலனி. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் அந்த சமயமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

படம் வெளியான சமயத்தில் இளைஞர்கள் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை இந்த திரைப்படம் உண்டு செய்தது என்றே கூறலாம். அந்த அளவிற்கு காதல் காட்சிகளை கண்கலங்க வைக்கும் வகையில் பார்த்து பார்த்து இயக்குனர் செல்வராகவன் இயக்கி இருந்தார். படம் பல விருதுகளையும் அள்ளி குவித்தது.

தமிழில் மட்டுமின்றி, இந்த திரைப்படம் தெலுங்கிலும் 7ஜி பிருந்தாவன் காலனி  என்ற பெயரில் வெளியானது. தமிழில் எந்த அளவிற்கு இந்த திரைப்படம் வரவேற்பை பெற்றது அதைப்போல தான் தெலுங்கிழும் அந்த சமயமே படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் சுமன் செட்டி, சுதா, சுதீபா பிங்கி, மயோரி உள்ளிட்டோர் நடித்துள்ளது அனைவர்க்கும் தெரியும்.

ஆனால், இந்த திரைப்படத்தில் பிரபல நடிகையான காஜல் அகர்வால் நடித்திருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இந்த திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வாலும் ஒரு சிறிய காட்சிகளில் நடித்திருக்கிறார்.  அதன்படி, படத்தில் வரும் நாம் வயதுக்கு என்ற பாடலில் புளு நிற சுடிதார் அணிந்துகொண்டு துணை நடிகையாக ஆடி கொண்டு இருப்பார்.

மேலும் இந்த நாம் வயதுக்கு  பாடலில் வருவது காஜல் அகர்வால் தான் என பலரும் கூறி வருகின்றனர். பலருக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளார் என்பது தெரியாது . இப்போது எப்படி தெரிந்தது என்னவென்றால் இந்த திரைப்படம் தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆனது. ரீ -ரிலீசான இந்த திரைப்படத்தை இன்றுதான் வெளியானது போல மக்கள் அனைவரும் கொண்டாடிட்டு வருகின்றனர்.

திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் ஒரு கோடிகளுக்கு மேல் வசூல் செய்து அதிர வைத்துள்ளது.  இந்நிலையில், தெலுங்கு ரசிகர்கள் அந்த பாடலை உன்னிப்பாக கவனித்த காஜல் அகர்வாலை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, காஜல் அகர்வால் நடித்த அந்த காட்சிகளின் புகைப்படங்களும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

unknown node