பணத்தைப் பெற்றுக் கொண்டு ஃபைனலில் இருந்து விலகி செல்லப்போகும் போட்டியாளர் இவர் தானா?

It is said that this time Ramya is the contestant who can get the money and go without going to the final stage of the Big Boss show.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தில் ஃபைனலுக்கு செல்லாமல் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறக்கூடிய போட்டியாளர் இந்த முறை ரம்யா தான் என கூறப்படுகிறது.

நூறு நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் உள்ளனர். சோம், ரியோ, ஆரி, பாலாஜி, ரம்யா மற்றும் கேபி ஆகியோர் மட்டுமே தற்போது வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு முறையும் இறுதி நேரத்தை எட்டும் பொழுது ஒரு குறிப்பிட்ட அளவு தொகை பணத்தை கொடுத்து ஃபைனலுக்கு செல்லாமல் ஒரு போட்டியாளர் வெளியேறுவது வழக்கம்.

அது போல இந்த முறை அவ்வாறு பணத்தை பெற்றுக்கொண்டு ஃபைனல் செல்லாமல் வெளியேறப் போவது ரம்யா தான் என கூறப்படுகிறது. ஏனென்றால் ஆரி தான் ஜெயிப்பார் என்பது போல தற்போது பேசப்படுவதால், ரம்யா பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.