இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ‘தளபதி 67’. விஜய் நடித்து வரும் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
unknown nodeThalapathy67 Update [Image Source : Twitter]
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் யார் யார் என்பதை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக மன்சூர் அலிகான் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeபடத்தில் இணைவது குறித்து பேசிய ‘யாணும் இணைந்தேன், தளபதி 67-இல் லோகேஷ் நீ ஆர்பரித்தெழு. திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே” என பேசியுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் வில்லனாக கலக்கி வந்த மன்சூர் தற்போது மிக்பெரிய படத்தில் நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.