அந்தரங்க வீடியோ மிரட்டல்..! யாருனு தெரியும்...தகுந்த பதிலடி கொடுப்பேன்...நடிகர் சுதீப் காட்டம்.!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவரது மேலாளர் ஜாக் மஞ்சுவுக்கு

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவரது மேலாளர் ஜாக் மஞ்சுவுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து வந்த கடிதத்தில், “கிச்சா சுதீப்பின் தனிப்பட்ட வீடியோவை” சமூக ஊடகங்களில் வெளியீட்டுவிடுவோம்” என மிரட்டல் வந்துள்ளது.

unknown node

kiccha sudeep SAD [Image Source : Twitter]

இந்த மிரட்டலை தொடர்ந்து  மேலாளர் அளித்த புகாரின் பேரில், புட்டனஹள்ளி போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 504, 506 மற்றும் 120 (பி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

unknown node

kiccha sudeep [Image Source : Twitter]

இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்த கிச்சா சுதீப்  ” எனக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது, அதை எனக்கு அனுப்பியது யார் என்பது எனக்குத் தெரியும். இது சினிமா துறையில் உள்ள ஒருவரிடமிருந்து வந்தது என்பதும் எனக்கு தெரியும். அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பேன். எனது கடினமான காலங்களில் என் பக்கம் நிற்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுவேன்” என கூறியுள்ளார் .

unknown node

மேலும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இன்று (புதன்கிழமை ) பிரபல அரசியல் கட்சி ஒன்றில் இணைவார் என தகவல் பரவி வருகிறது. அதற்கும் விளக்கம் அளித்த சுதீப் “எந்தக் கட்சியிலிருந்தும் நான் தேர்தலில் போட்டி போடவில்லை. நான் ஆதரவாக நிற்கிறேன், தேர்தல், அரசியலுக்கு எனக்கு பிடிக்கவில்லை. நான் யாருக்காக தேர்தலில் டிக்கெட் கேட்கவில்லை. சில நண்பர்கள் சார்பாக விளம்பரம் செய்துள்ளேன்.பாஜகவுக்காக மட்டுமே பிரசாரம் செய்வேன், தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என விளக்கம் கொடுத்துள்ளார்.