ஆஸ்கர் மேடையில் அவமதிக்கப்பட்டேன்..."தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்" பட தயாரிப்பாளர் வேதனை.!

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று முடிந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவண குறும்படமாக முதுமலையில்

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று முடிந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவண குறும்படமாக முதுமலையில் படமாக்கப்பட்ட தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்(The elephant whisperers)படம் வென்றது.

unknown node

இந்த ஆஸ்கர் விருதினை தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்  படத்தை தயாரித்த கார்த்திகி கோன்சால்வ்ஸ், குனீத் மோங்கா, ஆகியோர் பெற்று கொண்டார்கள். படக்குழுவினருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.

unknown node

guneet monga oscar [Image Source : Google ]

இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தான் அவமதிக்கப்பட்டதாக ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்பட தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் மிகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

unknown node

guneet monga oscar [Image Source : Google ]

இது குறித்து பேசிய குனீத் மோங்கா ” ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்  நான் அவமதிக்கப்பட்டதாக  உணர்கிறேன். விழா மேடையில் இயக்குநரை மட்டும் பேச அனுமதித்தார்கள். நான் பேச வரும்போது அனுமதிக்காமல் இசையை இசைத்து எனக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இது கொஞ்சம் கூட சரியில்ல நல்ல தல்ல” என தெரிவித்துள்ளார்.