பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஆரி வாத்தி கம்மிங் பாடலுடன் மாஸான என்டரி கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் .
சமீபத்தில் பிரமாண்டமாக கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதற்கு அடுத்தப்படியாக பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளது . வழக்கமாக நடக்கும் இந்த பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஆடல் ,பாடல் என அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொள்வார்கள்.அந்த வகையில் இந்த சீசனுக்கான கொண்டாட்டத்திலும் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர் . அவர்கள் அனைவரும் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிப்ரவரி 7-ம் தேதி டெலிகாஸ்ட் ஆக உள்ளதாக கூறப்படும் இந்த பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஆரி என்டரி கொடுக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது .அதில் வாத்தி கம்மிங் பாடல் பின்னணியில் ஒலிக்க ஆரி பைக்கில் மாஸான என்டரி கொடுக்கும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
unknown node