நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
unknown nodeஇந்த நிலையில், படம் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் படம் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். ஒரு வாரம் ஆகியும், படத்தை பார்க்க இன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.
unknown nodeவரும் ஜூன் -10 ஆம் தேதி இந்த திரைப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அப்படி இருந்தும் டான் படம் தமிழகத்தில் வெற்றிகரமாக திரையரங்குககளில் ஓடிகொண்டிருக்கிறது. இதனையடுத்து தமிழ் நாட்டில் மட்டும் படம் எத்தனை கோடி வசூல் ஆகியுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
unknown nodeஅதன்படி, இந்த படம் தற்போது வரை தமிழகத்தில் மட்டும் 80 கோடி வசூல் செய்துள்ளதாம் விரைவில் 100 கோடி வசூல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான 12 நாட்களிலே, உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. தற்போது உலகம் முழுவதும் 117 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.