நடிகை இலியானா சமீபகாலமாக தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
unknown nodeIleana D’Cruz hospital [Image Source : Twitter]
கையில் ஊசி மூலம் குளூக்கோஸ் ஏறும் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை இலியானாவே தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். ஆனால், என்ன நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதனை இலியானா கூறவில்லை.
unknown nodeIleana D’Cruz admitted to hospital [Image Source : Twitter]
ஃபுட் பாய்சன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும். சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தில் இலியானா மிகவும் பரிதமாக இருப்பதால் அவருடைய ரசிகர்கள் இலியானாவுக்கு என்ன நோயாக இருந்தாலும் உடனே சரியாக வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown nodeIleana D’Cruz admitted to hospital [Image Source : Twitter]
நடிகை இலியானா தமிழில் கேடி மற்றும் விஜய்க்கு ஜோடியாக ” நண்பன்” ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில் “Unfair & Lovely ” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.