தரமான கல்வி வேணும்னா காசு கொடுக்கணும்...'வாத்தி' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு.!

தனுஷ் நடித்து முடித்துள்ள வாத்தி திரைப்படத்திற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்து முடித்துள்ள வாத்தி திரைப்படத்திற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

வாத்தி டிரைலர்

தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடைசியாக படத்தின் இசை வெளியீட்டு விழா 4-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதனை தொடர்ந்து தற்போது டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

unknown node

டிரைலரில் ” தனுஷ்  ஒரு பள்ளியில்  ஆசிரியராக நடிக்கிறார். அங்கு நடக்கும் பிரச்னைகளை சமாளித்து வருகிறார். வில்லனாக சமுத்திரக்கனி நடிக்கிறார் என தெரிகிறது. ” தரமான கல்வி வேணும்னா காசு கொடுக்கணும் என அவர் பேசும் வசனங்களும், ட்ரைலரில் வரும் வசனங்கள் ,காதல் காட்சிகள்  ஜிவி பிரகாஷின் இசையும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்து படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

வாத்தி

unknown node

VaaVaathi [Image Source: Google ]

தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷுடன் சம்யுக்த்தா,தனிகெள பரணி, சாய் குமார், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ஷா ரா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.