நடிகை நிதி அகர்வால் தற்போது தமிழில் கலக தலைவன் எனும் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஹரி ஹர வீர மல்லு எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
unknown nodeNidhi Agarwal White Dress [Image Source: Google ]
மேலும் நடிகை நிதி அகர்வால் தனக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து விடுவார். அந்த வகையில், சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளித்த நிதி அகர்வால் சினிமா துறையில் திறமைக்கு மதிப்பு இல்லை.. உடம்பை காட்டினாள் தான் வாய்ப்பு கொடுப்பார்கள் என சற்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்களேன்-நான் கெட்ட வார்த்தை பேசுவேன்…ஓப்பனாக பேசிய பிரியா பவானி சங்கர்.!
unknown nodeNidhi Agarwal Cute Look [Image Source: Google ]
இது குறித்து பேசிய அவர் ” இப்போது இருக்கும் காலகட்டத்தில் சினிமா துறையில் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதை நான் நம்பமாட்டேன்.முதலில் அழகை மட்டும் தான் பார்க்கிறார்கள். திறமைக்கு மதிப்பு இல்லை. உடம்பை காட்டினால் தான் வாய்ப்புகள் கொடுப்பார்கள். திறமையை பார்த்து 20 சதவீதம் பேர் மட்டுமே வாய்ப்புகள் கொடுப்பார்கள்.
unknown nodeNidhi Agarwal White Dress [Image Source: Google ]
மற்றோரு விஷயம் என்னவென்றால், என்னை போல் ஒரு நடிகைக்கு பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது என்றால் சம்பளம் தான் காரணம். சம்பள விஷயத்தில் நான் சரியாக நடந்துகொள்வேன் கெடுபிடி செய்ய மாட்டேன். தயாரிப்பாளர்கள் எவ்வளவு பணம் கொடுக்கீறார்களோ அதனை மட்டும் தான் வாங்குகிறேன்” என வருத்தத்துடன் பேசியுள்ளார் நிதி அகர்வால்.