இத்தனை கோடி வசூல் செய்தால் தான் "களத்தில் சந்திப்போம்" வெற்றி படம்.. எத்தனை கோடி..?

Actor Jeeva and Arulnithi starrer KalathilSanthippom has reportedly grossed only Rs 2.15 crore in three days.

நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி ஆகியோர் நடிப்பில் வெளியான களத்தில்  சந்திப்போம் திரைப்படம் மூன்று நாட்களில் 2.15 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ளபுதிய திரைப்படம் களத்தில்  சந்திப்போம். இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை மஜிமா மோகனும் அருள் நீதிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கரும் நடித்துள்ளார்.

நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மட்டும் இந்த படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆம் தமிழகத்தில் வெளியாகி மூன்று நாட்களில் இந்த படம் 2.15 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைபோல் இந்த படம் வெற்றியடைய 7 கோடி இன்னும் வசூல் செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.