அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் – சுரபி.!

நடிகை சுரபி தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை

நடிகை சுரபி தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 வில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு அவருக்கு தமிழ் அந்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. தற்போது ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக அடங்காதே என்ற படத்திலும், 1 கன்னட படத்திலும், 3 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இவர் கூறியது, எனக்கு சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க பிடிக்கும். கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எல்லை மீறாத கவர்ச்சியில் நடிப்பது பிரச்சனை இல்லை. கவர்ச்சி என்ற பெயரில் குட்டை பாவாடை அணிந்து நடிக்கமாட்டேன். பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் பரவாயில்லை அப்டி மட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.