அவர் நடிப்பை பார்த்து நான் மிரண்டு போய்விட்டேன் – யோகி பாபு..!!

In a recent interview, actor Yogi Babu said that he was shocked to see Sheila Rajkumar's performance in Mandela.

மண்டேலா படத்தில் ஷீலா ராஜ்குமார்  நடிப்பை பார்த்து விட்டு மிரண்டு போயிட்டேன் என்று நடிகர் யோகி பாபு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் மண்டேலா. இந்த படத்தை தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்துள்ளார். சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், டாய்லட் படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது, படத்தை ரசிகர்கள் மட்டும் பார்த்துவிட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்காமல் பல சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் யோகி பாபு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது ” நான் இந்த படத்தில் ஷீலா ராஜ்குமார்  நடிப்பை பார்த்து விட்டு மிரண்டு போயிட்டேன். மிகவும் எதிர்த்தமாக நடிக்கிறார். அவருக்கு திருமணம் முடிந்த பிறகும் அவர் நடிக்கிறார். மிகவும் திறமையான பெண்” என்று கூறியுள்ளார்.

unknown node