நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன் – கைதி பிரபலம் ட்வீட்..!

George Marion, who starred in the film Prisoner, tweeted on his Twitter page that he still remembers March 1, when the director described the prisoner story to me.

கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் மரியன் தனது ட்வீட்டர் பக்கத்தில் “கைதி கதையை இயக்குனர் எனக்கு விவரித்த மார்ச் 1 தேதியை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகாஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. மிகவும் அருமையான கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பாடல்கள் இல்லாமல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. நடிகர் கார்த்திகிற்கு மிகவும் பெரும் வரவேற்பை கொடுத்தது. இந்த படம் விஜய் நடித்த பிகில் படத்துடன் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஜார்ஜ் மரியன் தனது ட்வீட்டர் பக்கத்தில் “கைதி கதையை இயக்குனர் எனக்கு விவரித்த மார்ச் 1 தேதியை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். 7 நாட்களுக்குப் பிறகு முதல் தோற்றம் வெளியிடப்பட்டது நன்றி ” என்று ட்வீட் செய்துள்ளார்.

unknown node