நான் யாரையும் காதலிக்கவில்லை – நந்திதா ஸ்வேதா..!

Actress Nandita Swetha so far I don’t love anyone She has said that she does not know if she will fall in love anymore

நடிகை நந்திதா ஸ்வேதா இதுவரை தான் யாரையும் காதலிக்கவில்லை இனிமேல் காதலிப்பேனா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, எதிர்நீச்சல், போன்ற திரைப்படங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன், அடுத்ததாக வெளியான கபடதாரி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களில் நடித்து வருகிறார். ஐபிசி 376, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய திரைப்படங்கள் திரையங்குகளில் வெளியாகவுள்ளது. தான் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இவர் “எதிர்காலத்தில் நடப்பது  என்னவென்று தெரியாது. இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை இனிமேல் காதலிப்பேனா என்று தெரியவில்லை. என்னுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி அமையும் என்று என்னால் கணிக்க முடியவில்லை”  என்று கூறியுள்ளார்.