நான் என்ன கொலை குத்தமா பண்ணிட்டேன் மன்னிப்பு கேட்க மாட்டேன் ராதாரவி அதிரடி

This news gives information about I do not ask forgiveness for the murder of the ravativir's action-naan enna kolai kurama paniviten manippu ketka maten ratharavi athiradi

நடிகர் ராதாரவி நயன்தாராவின் “கொலையுதிர்காலம்’ இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு நயன்தாராவை தவறாக பேசி  சர்ச்சை கிளப்பினார்.

நடிகர் ராதாரவி நயன்தாராவின் “கொலையுதிர்காலம்’ இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு நயன்தாராவை தவறாக பேசி  சர்ச்சை கிளப்பினார். இதனால் இவரை நடிகர் சங்கம் கடுமையாக கண்டித்தது . மேலும் இவரை இவரது கட்சி தற்காலிகமாக கட்சியை விட்டு நீக்கி விட்டது.

இதனை அடுத்து இவர் தற்போது ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது  இது தொடர்பாக பேசியுள்ளார். அதில் நான் படத்தில் நடிக்க வில்லை என்றால் என்ன நான் நாடகத்தில் நடிப்பேன். மேலும் நான் குறும்படம் ,வெப்சிரியஸ் முதலியவற்றில் நடித்தாலும் நான் நடிகன் தான். நான் எம் .ஆர் ராதாவின் மகன் தான் என்றும் கூறியுள்ளார்.  எனது நடிப்பை நிறுத்தி விடலாம் என யாராவது நினைத்தால்  அது நடக்காது.

மேலும் அவர் நான் சந்தித்தது ஒரு பிரச்சனையே கிடையாது. நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன். மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுடைய பரம்பரைக்கே கிடையாது எனவும் கூறியுள்ளார். நான் கொலை குற்றமா பண்ணி விட்டேன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளளார்.

நான் என்ன கொலை குத்தமா பண்ணிட்டேன் மன்னிப்பு கேட்க மாட்டேன் ராதாரவி அதிரடி