மாஸ்டர் படத்தால் தான் கர்ணன் படத்தை வெளியிட முடிவு செய்தேன்- கலைப்புலி தாணு...!

Kalaipuli S. Thanu has said that the master film was well received by the people and that is why Karnan decided to release the film.

மாஸ்டர் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும், நல்ல வசூலையும் வசூலத்து அதனால் தான் கர்ணன் படத்தை வெளியிட முடிவு செய்ததாக கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அளித்துள்ள பேட்டி ஒன்றில் ” கர்ணன் படத்தை மக்கள் எப்போது கூட்டம் கூட்டமாக பார்க்க திரையரங்கிற்கு வருகிறார்களோ அப்போது படத்தை வெளியீட திட்டமிட்டேன்.  அப்போது தான் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் வசூலத்து வந்தது. அதனால் தான் கர்ணன் படத்தை ஏப்ரல் 9 ஆம் தேதி திட்டமிட்டேன் என்று கூறியுள்ளார்.