திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னை வருகிறேன் – GVP.!

இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தற்போது யானை, மாறன், வாடிவாசல் போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுமட்டுமின்றி இடிமுழக்கம், செல்ஃபி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

unknown node

இதில் இடிமுழக்கம் படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கியுள்ளார். படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். ஸ்கைமன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரிப்பாளர் கலைமான் தயாரிக்கிறார்.

unknown node

இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. விறு விறுவென நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

unknown node

இதனை ஜிவி பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது குறித்துஇடிமுழக்கம்படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது , திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னை வருகிறேன்.இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்கு தந்த சீனு ராமசாமிசாருக்கு நன்றி. என பதிவிட்டுள்ளார்.

unknown node