பணத்திற்காகவே நடிக்க வந்ததாக பிரியா பவானி சங்கர் கூறியதாக சர்ச்சை பேச்சுகள் எழுந்த நிலையில் அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று நடிகை பிரியா பவானி சங்கர் தான் ” தமிழில் நடிக்க வந்த போது எதிர் காலம் பற்றிய பெரிய திட்டம் எதுவும் இல்லை என்றும் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா, இல்லையா என்றும் கவலைப்படவில்லை எனவும் நடித்தால் பணம் வருகிறது என்று நினைத்தேன், அதற்காகவே நடித்தேன்” என்று கூறியதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வந்தது .
இதனை பார்த்த பலரும் இது உண்மையா அல்லது வதந்தி தகவலா என்பது கூட தெரியாமல் இது அல்லவா லட்சியம் எனவும், பின்ன என்ன எல்லாரும் சும்மாவா நடிச்சுட்டு இருக்காங்க பணத்துக்காக தான் நடிக்கிறாங்க எனவும் பிரியா பவானி சங்கரை இணையத்தில் திட்டி தீர்த்தனர்.
இதனால் பதறிப்போன பிரியா பவானி சங்கர் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் தான் அப்படி சொல்லவே இல்லை இது வதந்தி தான் என கூறி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ” ‘மாப்ள சொம்பு கொடுத்தாதான் தாலி கட்டுவாராம்’ என மனநிலையில் ஊடகங்கள் இருக்கிறார்கள். நான் சொன்னதாக பரவும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை.
நான் அப்படி பேசவேயில்லை. அப்படி கூறி இருந்தாலும் அதில் தவறேதும் இல்லையே. இங்கு எல்லாரும் பணத்திற்காகதானே நடிக்கிறார்கள். நானும் அதற்காகவே நடிப்பதில் தவறேதும் இல்லையே. இதனால் யாரையும் தரக்குறைவாக பேசுவது தேவையில்லாத ஒரு விஷயம். என்னுடைய பாதையில் யாரும் தலையிட நான் விரும்பவில்லை” என விளக்கம் கொடுத்துள்ளார்.
unknown node