சிம்பு நடிப்பில் நேற்று வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு சிம்பு படத்தில் மிகவும் வித்தியாசமாக நடித்துள்ளதால் சிம்பு ரசிகர்கள் அனைவர்க்கும் படம் மிகவும் பிடித்துள்ளது.
unknown nodeஇந்த நிலையில் நடிகர் சிம்பு சமீபத்திய ஒரு பேட்டியில் ” தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படங்களை கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு இருக்கும் என்று அதிரடியாக பேசியுள்ளார்.
இதையும் படியுங்களேன்-விஜய் ரசிகர்களை ஏமாற்றிய தமன்.! வாரிசு அப்டேட்டில் என்ன செய்து வைத்துள்ளார் பாருங்க…
unknown nodeஇது குறித்து அவர் பேசியது ” ‘ஆரம்ப கட்டத்தில் என்னிடம் ஒரு வேகம் இருந்தது.. ஆனால், படங்களை எப்படி தேர்வு செய்யணும் என்ற தெளிவு அப்போது எனக்கு இல்ல தற்போது, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படங்களை கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு இருப்பதாக உணர்கிறேன்.
unknown nodeநான் தற்போது காட்டுப் பசியில் இருக்கிறேன்.. அந்த பசியை தணிக்கும் விதமான கதைகள் எனக்கு கிடைக்கவில்லை.. இதே போன்ற ஒரு மனநிலை முன்பு இருந்தபோது மன்மதன் படம் செய்தேன்.. ஒருவேளை நானே தற்போது ஒரு படத்தை இயக்க வேண்டி இருக்கும், அல்லது அது போன்ற ஒரு கதையை நான் தேட வேண்டும். என தான் அடுத்து நடிக்கபோகும் படங்கள் குறித்த சிலம்பரசன் பேசியுள்ளார்.