முத்தக்காட்சியில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் – அதிதி ராவ்..!

Actress Aditi Rao has said in a recent interview that she is ready to act in a kiss scene.

முத்தக்காட்சியில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று நடிகை அதிதி ராவ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகை அதிதி ராவ் தமிழ் சினிமாவில் சிருங்காரம் என்ற படத்தில் நடித்தன் மூலம் அறிமுகமானார் காற்று வெளியிடை என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சைக்கோ படத்தில் நடித்தார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது மகா சமுத்திரம் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்த சில தகவலை கூறியுள்ளார்.

இதில் பேசிய நடிகை அதிதி ராவ் ” எனக்கு சவாலான வேடங்களில் நடிப்பது விருப்பம் அதற்காக நான் தயாராக இருக்கிறேன். உணர்ச்சிகரமாக நடிக்கவேண்டும் என்றாலும், முத்தக்காட்சியில் நடிக்கவேண்டும் என்றாலும், தயங்கமாட்டேன். தேவையில்லாத காட்சிகளை படத்தில் திணிப்பது போல் இருக்கக்கூடாது. கதைக்கு கண்டிப்பாக தேவையென்றால் முத்தக்காட்சியோ, அல்லது கவர்ச்சியாகவோ நடிக்க தயாராக இருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.