தமிழில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஷெரின் தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்-ஆக கலந்துகொண்டுள்ளார். கடந்த வாரம் கூட அருமையாக சமைத்து செஃப்களிடம் பாராட்டு வாங்கினார்.
unknown nodeஇந்நிலையில், 37 வயதாகும் ஷெரின் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதனால் அவரிடம் பலரும் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி கேட்பது உண்டு. இவருக்கு எப்போது தான் திருமணம் நடக்கும் என அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
unknown nodeஇதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்த ஷெரினிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம்.? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு ஷெரின் சூப்பரான பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.
unknown nodeதிருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ” எனக்கு விரைவில் திருமணம் நாடாகும். சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளேன். என்னுடைய ஜாதகப்படி அக்டோபர் மாதத்தில் நடக்கும் என கூறியிருக்கிறார்கள்” என கூறியுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.