Trisha : எப்போதும் நான் தான் டாப் ஒன்.! மொத்த பெரிய படங்களையும் கைக்குள் போட்ட த்ரிஷா!

நடிகை த்ரிஷா கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான பேட்டை திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பிறகு, அவருடைய நடிப்பில் பரமபதம்

trisha

நடிகை த்ரிஷா கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான பேட்டை திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பிறகு, அவருடைய நடிப்பில் பரமபதம் விளையாட்டு திரைப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை. பிறகு மணிரத்தனம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார்.

இந்த படத்தின் மூலம் நடிகை த்ரிஷாவின் மார்க்கெட் எங்கயோ சென்றுவிட்டது என்றே கூறலாம். பொன்னியின் செல்வன் முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இரண்டாவது பாகமும் வெளியானது . நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு ரீ-எண்டரி கொடுத்த நடிகை த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே த்ரிஷாவுக்கு கோலிவுட்டில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, லியோ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில்  உருவாகவுள்ள அவருடைய 234-வது திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந் நடிக்கவுள்ள தலைவர் 171 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகம் தகவல்கள் வெளியாகியுள்ளது.

லியோ படத்தில் நடித்துள்ளது மட்டும் தான் இதில் உறுதியான ஒன்று மிதி இருக்கும் படங்களில் அவர் கமிட் ஆகி இருப்பதாக பரவுவது தகவல் தான். இருப்பினும் நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் பரவி வருவதால் கிட்டத்தட்ட இந்த படங்களில் த்ரிஷா நடிப்பது உறுதி எனவும் விரைவில் இந்த படங்களில் த்ரிஷா நடிக்கவிருக்கும் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக ரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்தால் கண்டிப்பாக அவருடைய மார்க்கெட் எங்கயோ போகப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி, த்ரிஷா விடாமுயற்சி, கமல்ஹாசனின் 234, ரஜினியின் 171 ஆகிய படங்களில் நடித்தால் கண்டிப்பாக அடுத்ததாகவும் அவருக்கு பல பெரிய படங்களில் நடிக்க தான் வாய்ப்பு கிடைக்கும் எனவே ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தாரோ மீண்டும் த்ரிஷா அதைப்போலவே படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக பரவும் தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.