சூர்யாவின் மிகப்பெரிய ரசிகன் நான் – இசையமைப்பாளர் தமன்..!

Composer Daman has said that Surya is a good actor who I like very much and I am his big fan

சூர்யாவை எனக்கும் மிகவும் பிடிக்கும் நல்ல நடிகர் அவரது பெரிய ரசிகன் நான் என்று இசையமைப்பாளர் தமன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. ஒரு காலகட்டத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இவரது நடிப்பில் கடைசியாக அமேசான் பிரேமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 40 ஆவது படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து வாடிவாசல், அருவா, நவராசா போன்ற படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் சூர்யாவை பற்றி பல பிரபலங்கள் பெருமையாக கூறுவது உண்டு அந்த வகையில். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற சினமா துறையில் கலக்கி வருபவர் இசையமைப்பாளர் தமன் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் போது ரசிகர்கள் ஒருவர் சூர்யாவை பற்றி கேட்டதற்கு ” சூர்யாவை எனக்கும் மிகவும் பிடிக்கும். நல்ல நடிகர் அவரது பெரிய ரசிகன் நான் என்று கூறியுள்ளார்.