மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

In Chennai alone, it grossed Rs 1.21 crore on the first day and is the second highest grossing Tamil film so far in Tamil Nadu.

சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ.1.21 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை வந்த தமிழ் படங்களில், முதல் நாள் வசூலில் அதிகம் வசூல் செய்த படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் நேற்று திரைக்கு  வந்தது.இப்படம் நேற்று தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இப்படம் நேற்று வெளியாகி நேர்மைறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ.1.21 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  தமிழகத்தில் இதுவரை வந்த தமிழ் படங்களில், முதல் நாள் வசூலில் அதிகம் வசூல் செய்த படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.