உலகம் முழுவதும் மாஸ்டர் படம் எத்தனை கோடி வசூல்...?

The master movie starring Vijay Sethupathi has reportedly grossed Rs 241 crore worldwide.

விஜய் மாற்று விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் உலகளவில் 241 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. அதிலும் மிரட்டலான வில்லனாக விஜய் சேதுபதி நடித்து அசத்தியிருப்பார் . திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் அண்மையில் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகி அங்கையும் மக்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை தமிழகத்தில் மட்டும் மாஸ்டர் திரைப்படம் 139 கோடி வசூல் செய்துள்ளது. அதைபோல் உலகளவில் 241 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.