நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு அடித்த அதிர்ஷ்டம்.! இத்தனை கோடியா.?வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

Actor Arya's sister Taslina has won the lottery for Rs 32 crore

நடிகர் ஆர்யாவின் சகோதரியான தஸ்லீனாவிற்கு ரூபாய் 32 கோடிக்கான லாட்டரி அடித்துள்ளது .

இந்தியாவில் மட்டுமன்றி பல நாடுகளில் லாட்டரி சீட்டுகளை மக்கள் ஆர்வமுடன் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர் .அந்த வகையில் காத்தர் நாட்டில் கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வரும் நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனாவிற்கு அடித்த அதிர்ஷ்டம் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

அதாவது தஸ்லீனா கடந்த ஜனவரி 26-ஆம் தேதி லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.அதன் முதல் பரிசு 15 மில்லியன் திர்காமாம். அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 32 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது லாட்டரி சீட்டிற்கான முடிவுகள் வந்துள்ளது.அதில் முதல் பரிசான 32 கோடியை ஆர்யாவின் சகோதரியான தஸ்லீனா பெற்றுள்ளார் .இது அவரது குடும்பத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அதனுடன் இந்த லாட்டரி சீட்டிற்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசும் இரண்டு இந்தியர்களுக்கே கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.