துணிவு திரைப்படம் எப்படி இருக்கு..? ட்வீட்டர் விமர்சனம் இதோ.!

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "துணிவு". இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “துணிவு”. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

unknown node

AjithKumar Thunivu [Image Source : Twitter]

பலத்தை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று அதிகாலை1 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது படத்தை அவருடைய ரசிகர்கள் தியேட்டரில் திருவிழாவைப் போல கொண்டாடி வருகிறார்கள்.  படத்தைப் பார்த்த பலரும் படம் அருமையாக இருக்கிறது என கருத்துக்களை கூறிய வருகிறார்கள்.

unknown node

Thunivu Official Trailer [Image Source: Twitter ]

இந்த நிலையில் தற்போது படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம். படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் “படத்தின் முதல் பாதி மிக அருமையாக இருப்பதாகவும், இரண்டாவது பாதி அதைவிட சரியான மாஸ் காட்சிகள் நிறைந்துள்ளதாகவும் படத்தை இயக்குனர் எச்.வினோத் அருமையாக எடுத்திருக்கிறார் எனவும் பதிவிட்டுள்ளார்.

unknown node

அதனை தொடர்ந்து படத்தை பார்த்த நடிகர் அருண் விஜய் ” அஜித் சாரின் நடிப்பு மிகவும்  அருமையாக இருக்கிறது. பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கிறது… அதிரடி..திரைக்கதை.. நடிப்பு.. செய்தி… H வினோத் மற்றும் குழுவினருக்கு  பாராட்டுக்கள்.

unknown node

மற்றோருவர், “துணிவு”  படம் பல த்ரில்லிங், பல  திருப்பங்களுடன் கூடிய இறுக்கமான வங்கி திருட்டு. அஜித் குமாரை பார்க்க மிகவும் மிரட்டலாக இருக்கிறார். மஞ்சு வாரியர்அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.வினோத் அதை ரசனையாகவும் சுவாரஸ்யமாகவும் ஆக்கியுள்ளார்.

unknown nodeunknown nodeunknown nodeunknown node