சூர்யா 40 படம் எப்படி இருக்கும்....? இயக்குனர் பாண்டிராஜ் கூறிய தகவல்..!!

Surya 40 will be a film that can be celebrated like a shoplifting lion movie

சூர்யா 40 திரைப்படம் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் போல கொண்டாடக் கூடிய படமாக இருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

படத்திற்கான படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சூர்யா 40 திரைப்படம் எப்படி இருக்கும் என்று படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “கடைகுட்டி சிங்கம் ஒவ்வொரு காட்சியும் கொண்டாடும் படி இருந்ததோ அதே போல கொண்டாடக் கூடிய படமாக சூர்யா 40 திரைப்படமும்  இருக்கும்” என்று  கூறியுள்ளார்.