தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் பலத்தை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது. தமிழில் வாத்தி என்ற பெயரிலும் தெலுங்கில் சார் என்ற பெயரிலும் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது. படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். படத்தில் சம்யுக்த்தா,தனிகெள பரணி, சாய் குமார், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ஷா ரா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
unknown nodeVaathi dhanush [Image Source : Google ]
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.
unknown nodeunknown nodeமற்றோருவர் “தனுஷின் தீவிர நடிப்பு, வெங்கிஅட்லூரியின் நேர்மையான நோக்கங்கள் நேர்மையான முயற்சிகள், எல்லாவற்றிற்கும் மேலாக ஜிவிபிரகாஷின் உள்ளத்தைக் கிளறும் பின்னணி இசை. தயாரிப்பாளருக்கு பாராட்டுக்கள். வாத்தி உண்மையில் சிறந்த படம்” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeமற்றோருவர் ” வாத்தி திரைப்படம் மிகவும் அருமை. தனுஷ் சினிமா கேரியரில் சிறந்த ஒரு திரைப்படம். நல்ல எழுத்து மற்றும் உரையாடல்… சிறந்த ஊக்கமளிக்கும் படம்” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeபடத்தை பார்த்துவிட்டு மற்றோரு நெட்டிசன் ” வாத்தி திரைப்படத்தில் டயலாக்ஸ் ஒவ்வொண்ணும் தரம். படிப்பு எவ்ளோ முக்கியம், ஜாதி மதம் பாகுபாடு எவ்ளோ கேவலமானதுனு ஆணியடிச்ச மாரி சொல்லிருக்காங்க” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeமற்றோருவர் ” வாத்தி திரைப்படம் நன்றாக இருக்கிறது. கமர்ஷியல் ஹீரோ தனுஷை புத்திசாலித்தனமாக பயன்படுத்தியிருக்கிறார் வெங்கி அட்லூரி அழகான நாயகி சம்யுக்த்தா நடிப்பு மிகவும் அருமை. மக்கள் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் ஒரு அர்த்தமுள்ள திரைப்படம் என பதிவிட்டுள்ளார்.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeவிமர்சனத்தை வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் படமாக இருக்கும் என தெரிகிறது. கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. எனவே தற்போது வாத்தி படமும் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளதால் படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என கூறப்படுகிறது.