புதிய அவதாரத்தில் 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி...வெளியானது 'வீரன்'ஃபர்ஸ்ட் லுக்!

'ஹிப்ஹாப் தமிழா' ஆதி நடித்துள்ள 'வீரன்' படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டிலும் கலக்கி வரும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி இன்று தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் சென்றும், சமூக வலைத்தளங்களின் மூலமும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

unknown node

HBDHiphopTamizhaAdhi [Image Source : Google ]

இந்த நிலையில், தற்போது அவர் ‘மரகத நாணயம்’ இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில்  ‘வீரன்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று ஆதியின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

unknown node

Hiphop Tamizha Adhi veeran [Image Source : Google ]

அதன்படி தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் வித்தியாசமான ஒரு லுக்கில்  ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி இருக்கிறார். எனவே படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதாக இருக்கும் என தெரிகிறது.

unknown node