பிடித்ததை, பிடித்தவர்களுடன், பிடித்தவர்களுக்காக செய்வது பாக்கியம் தான் – ஹிப்ஹாப் ஆதி..!

Actor HipHop Adi tweeted on his Twitter page thanking everyone who wished him a happy birthday.

நடிகர் ஹிப் ஹாப் ஆதி தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்து ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான நான் சிரித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பான வசூலை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகும் அன்பறிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடிகை காஷ்மீரா நடித்துவருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்திற்கான மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த நிலையில் நேற்று நடிகர் ஆதியின் பிறந்த நாளிற்கு பலதரப்பலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வந்தது.

இதற்காக நன்றி தெரிவித்து நடிகர் ஆதி தனது ட்வீட்டர் பக்கத்தில் படப்பிடிப்பில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ” இந்த வாழ்க்கை கொஞ்ச காலம் தான் என நன்கு உணர்த்தியது கோவிட். இருக்கும் வரை பிடித்ததை, பிடித்தவர்களுடன், பிடித்தவர்களுக்காக செய்வது ஒரு பாக்கியம் தான். இந்த பிறந்தநாளை என்னை நேசிக்கும் நபர்களுடன் செட்களில் தொடங்கினேன், என்னை நிபந்தனையின்றி நேசிக்கும் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.என்று தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

unknown node