அமேசானில் வெளியாகும் மாஸ்டர்.! தியேட்டரில் பார்க்காததை இங்க பார்க்கலாம்.!

It is said that the master image that will be released tomorrow on Amazon can be viewed as a film without censor cut.

அமேசானில் நாளை வெளியாக உள்ள மாஸ்டர் படத்தினை சென்சார் கட் இல்லாத படமாக பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.மேலும் இந்த படத்தினை நாளை முதல் ஓடிடியிலும் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஓடிடியில் வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படமானது சென்சார் கட் இல்லாத படமாக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது மாஸ்டர் திரைப்படம் சென்சாருக்கு சென்ற போது அதில் சர்ச்சைக்குரிய வகையிலுள்ள காட்சிகள் சில கட் செய்யப்பட்டு 3 மணி நேர காட்சிகள் மட்டும் ஒளிப்பரப்பட்டது .ஆனால் ஓடிடியில் அதில் கட் செய்யப்பட்ட காட்சிகள் அனைத்தும் இதில் இருக்கும் என்றும்,அப்போது படத்தின் ரன்னிங் டைமும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது தளபதி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.