சூரரைப் போற்று படம் பார்க்க கூட்டம் கூட்டமாக வந்த ரசிகர்கள்...! வீடியோ இதோ..!

Surya starrer 'Suraraiporu' released on Amazon frame has been released in theaters today.

சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத் திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் சிறப்பான விமர்சனத்தை பெற்றது.

கடந்த ஆண்டே திரையரங்குகளில் வெளியாகும் என்று திட்டமிட்டிருந்த படக்குழு கொரோனா வைரஸ் பரவல் காரணாமாக ஓடிடியில் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை சில திரையங்குகளில் ரிலீசாகி உள்ளது. படத்தை பார்க்க மிகவும் அதிகமாக ரசிகர்கள் வருகை தந்துள்ளார்கள். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node