தல பிறந்த நாளை முன்னிட்டு வலிமை சம்பவம்... உற்சாகத்தில் தல ரசிகர்கள்..!

It has been reported that the film crew is planning to release the movie 'Valimai' starring Ajith on his birthday on May 1 and the work is in full swing.

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை .எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது . அப்டேட்டை காத்திருக்கும் தல ரசிகர்களுக்கு தல அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் தான் மகிழ்ச்சியை அளிக்கிறது.

பைக் ரேஸ் காட்சிகளும், ஸ்டண்ட், காட்சிகளும் அதிகமுள்ள வலிமை படத்திலிருந்து ஏற்கனவே தல அஜித் பைக் ரேஸ் செய்யும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆம் இந்த வலிமை படம் நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.