கண்கலங்க வச்சுட்டீங்க…31 குழந்தைகளை தத்தெடுத்த ஹன்சிகா.! குவியும் பாராட்டுக்கள்..!

Default Image

31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

நடிகை ஹன்சிகா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் பிரமாண்ட முறையில் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து ஹன்சிகா சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் சொன்ன ஒரு விஷயம் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது. அப்படி அவர் என்ன சொன்னார் என்றால், ஹன்சிகா இதுவரை 31 குழந்தைகளை தத்தெடுத்து வளத்து வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ஹன்சிகா ” என்னுடைய அம்மா எனக்கு சிறிய வயதில் இருந்தே சொல்லி கொடுத்து ஒரு விஷயம் பண்டிகை நாட்களில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பது தான்.

எனவே நான் கதாநாயகி சினிமாவிற்கு வந்த பிறகு குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டேன். அப்படி, இப்போது என்னிடம் 31 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களை தத்தெடுத்து வளர்ப்பது ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த குழந்தைகளுக்கு புது துணிகள் எடுத்து கொடுத்தேன்.

அப்போது அந்த குழந்தைகளின் முகத்தில் வந்த சந்தோஷத்தை என்னுடைய வார்த்தைகளால் என்னால் கூறவே முடியாது.  எனக்கு திருமணம் முடிந்த  பிறகு சினிமாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்தேன். தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் 31 குழந்தைகளை ஹன்சிகா தத்தெடுத்து வளத்து வரும் தகவலை கேட்ட அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்