சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு , உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய இயக்குனர் வினோத் அடுத்ததாக யாரை வைத்து திரைப்படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கான தகவல்களும் அடிக்கடி சமூக வலைதளபக்கங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது வழக்கமான ஒன்று.
unknown nodeHVinoth [Image Source : Google]
அந்த வகையில், கடந்த சில நாட்களாவே ஒரு பக்கம் இயக்குனர் வினோத் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்கப் போகிறார் என்றும், மற்றொரு பக்கம் கமல்ஹாசனை வைத்து அவர் படம் இயக்க போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் அவர் யாரை வைத்து தான் படம் இயக்கப் போகிறார் என்ற குழப்பத்தில் சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள்.
unknown nodeh vinoth kamal haasan dhanush [Image Source : Twitter]
இந்த நிலையில், தற்போது அதற்கான விளக்கமான தகவல் ஒன்று தற்பொழுது கிடைத்துள்ளது . அதன்படி, இயக்குனர் வினோத் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து தான் ஒரு படம் இயக்கப் போகிறாராம்.கமல்ஹாசனை வைத்து அவர் படத்தை இயக்கி முடித்த பிறகு தான் தனுசை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறாராம். கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மே மாதத்துடன் முடிவடையும் என கூறப்படுகிறது.
unknown nodeh vinoth kamal haasan [Image Source : Twitter]
அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியன் 2 திரைப்படம் வெளியான பிறகு கமல் – வினோத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.