நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார்.இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ஜாலியா ஜிம்கானா பாடல் இன்று 6 மணிக்கு வெளியாகிறது.
unknown nodeஇந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 66 வது படத்தில் நடிக்கவுள்ளார். படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.
unknown nodeமேலும், படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு குறித்து தான்
unknown nodeமுன்னதாக மார்ச் 19-ஆம் தேதி தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி, இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.