5 வது முறையாக இணையும் ராம் & யுவன் கூட்டணி...?

Yuvan Shankar Raja is said to be teaming up with director Ram again in the 5th one film

யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் இயக்குனர் ராம்யுடன் 5 வது ஒரு திரைப்படத்தில் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்திற்கு இசையமைத்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக அஜித் நடித்து வரும் வலிமை படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பல படங்களில் இசையமைவுள்ளார். இந்த நிலையில் யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் இயக்குனர் ராம்யுடன் 5 வது ஒரு திரைப்படத்தில் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான பேரன்பு, தங்கமீன்கள், தரமணி, கற்றது தமிழ் ஆகிய நான்கு திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் யுவன் தான் இசையமைத்திருந்தார். படத்தின் கதை எந்த அளவிற்கு அருமையாக அமைந்ததோ அதே அளவிற்கு இசை அருமையாக இருந்தது. நா.முத்துக்குமார்  எழுதிய பாடல்கள் அணைத்து ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக திரைப்படங்கள் இயக்காமல் இருந்த ராம் தற்பொழுது மீண்டும் திரைப்படம் இயக்குவதால் ரசிகர்கள் அந்த படத்திற்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.