சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடிக்கும் பிரியங்கா மோகன்.??

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "அண்ணாத்த" திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இப்படத்தின் வெற்றியை

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “அண்ணாத்த” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக ரஜினி தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது.

unknown node

இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் ஹைதராபாத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

unknown node

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏனெனில், நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் பிரியங்கா தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவில்லை என தகவல் பரவி வருகிறது. படத்தில் பிரியங்கா நடிக்கிறாரா இல்லையா என்பதை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகுதான் தெரிய வரும் அதுவரை பொறுமையுடன் காத்திருக்கலாம்.