பிக்பாஸ் 5- வில் தான் கலந்துகொள்வதாக பரவும் தகவல்களுக்கு ஜி.பி.முத்து விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் . உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 5-வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.
அதற்கான ப்ரோமோ வீடியோவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அவ்வப்போது, சமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல் பரவி வருவது வழக்கமான ஒன்று தான்.
அந்த வகையில், பிக்பாஸ் 5- வில், டிக்டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து கலந்து கொள்வதாக தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில் இதற்கு ஜிபி முத்து விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று ஜிபி முத்து தனது யூடியூபில் நேரலை போட்டிருந்தார். அப்போது பிக்பாஸ் 5- வில் கலந்துகொள்வதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ” பிக்பாஸ் வீட்டுக்குள் நான் இருப்பது பற்றி நானே யோசித்து தான் சொல்ல வேண்டும். என்னால் போன் இல்லாமல் ஒரு நாள் கூட என்னால் இருக்க முடியாது. என்னுடைய குழந்தைகளை பார்க்காமலும் என்னால் இருக்க முடியாது. எத்தனை தடைகள் வந்தாலும் எனக்கு, என்னுடைய மனைவியும் குழந்தைகளும்தான் முக்கியம்” என கூறியுள்ளார்.