தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

தக் லைஃப் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை 147 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ThugLife

சென்னை :கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து ட்ரோல்களை சந்தித்தது. வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வசூல் செய்யாமல் தோல்வி அடைந்தது. அந்த தோல்வியை தொடர்ந்து அடுத்தாக கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக்லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பொதுவாகவே, ஒரு நடிகருடைய படம் சரியாக போகவில்லை என்றால் அவருடைய அடுத்த படங்களுக்கான விற்பனை வியாபாரத்தில் முந்திய படத்தை விட குறைவான விலைக்கு தான் விற்பனை ஆகும். ஆனால், கமல்ஹாசனுக்கு அப்படி இல்லை…அவருடைய இந்தியன் 2 படம் தோல்வி அடைந்தபோதிலும் அவருடைய அடுத்த படமான தக்லைஃப்  பிரமாண்ட விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தக்லைஃப் திரைப்படத்தினை பெரிய நிறுவனம் ஒன்று பிரமாண்ட விலைக்கு படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சேனல் கொடுத்த விலைக்கு இதுவரை எந்த தமிழ் படங்களும் டிஜிட்டலில் விற்பனை ஆனதே இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட அந்த நிறுவனம் தக் லைஃப் படத்தினை மொத்தமாக 147 கோடி கொடுத்து டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனம் வேறு எந்த நிறுவனமும் இல்லை பல பெரிய பெரிய படங்களை வாங்கி வரும் நெட்ப்ளிக்ஸ் தான் தக்லைஃப் படத்தையும் வாங்கியுள்ளது.

இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் டிஜிட்டல் உரிமை 100 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்பனையான படம் என்ற சாதனையை படைத்தது வைத்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது, அந்த கோட் படத்தின் விற்பனை விலையை மிஞ்சும் அளவுக்கு தக்லைஃப்  படம் விற்பனை ஆகி தமிழ் சினிமாவில் சாதனை படைத்துள்ளது.