இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.
unknown nodeஇந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அடுத்த மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
unknown nodeஇந்த திரைப்படம் பூவே உனக்காக படத்தைப் போல காதல் கதையை மையமாக வைத்து படம் உருவாகும் என முன்னதாகவே தகவல்கள் பரவி வந்தது. இதற்கிடையில், தற்போது ரசிகர்களை ஏமாற்றமடையும் மாறு படத்தில் ஒரு விஷயம் இல்லயாம்.
unknown nodeஅது என்னவென்றால், வழக்கமாக விஜய் நடிக்கும் படங்களில் சண்டைகாட்சிகள், பாடல்கள்,வசனங்கள் என பல இருக்கும். ஆனால் இந்த திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் கிடையாதாம். நண்பன் பட பாணியில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeநண்பன் படத்தில் சண்டை காட்சிகள் இருக்காது. ஆனால் படம் செம ஹிட்டானது. தற்போது விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்திலும் சண்டைக் காட்சிகள் இல்லை என்பதால் சில ரசிகர்கள் சோகமாக இருந்தாலும், சில ரசிகர்கள் படத்தை கொண்டாட தயாராகிவிட்டனர்.