நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
unknown nodeஇந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான பாடல்கள், டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.
unknown nodeஇந்த நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, செப்டம்பர் முதல் வாரத்தில் பிரமாண்டமாக பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் கல்லூரியில் நடைபெறவுள்ளதாம். படம் பாதி மும்பையில் எடுக்கப்பட்டதால், அதே போலவே இசை வெளியீட்டு விழாவிற்கும் செட் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
unknown nodeமேலும் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அழைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் சிம்பு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.