கனி பிக் பாஸ் சீசன் 5-வில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் . உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 5-வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.
unknown nodeஅதற்கான ப்ரோமோ வீடியோவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அவ்வப்போது, சமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல் பரவி வருவது வழக்கமான ஒன்று தான்.
unknown nodeஅந்த வகையில், பிரியங்கா, மிலா, பவானி ரெட்டி, இமான் அண்ணாச்சி, போன்ற பலரது பெயர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
unknown nodeஇந்த வரிசையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கனி பிக் பாஸ் சீசன் 5-வில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.