சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக சரவணன் அறிமுகமாகிறார்.
unknown nodeஇந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். படத்தின் டிரைலர், இசை வெளியீட்டு விழா நாளை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
unknown nodeஇந்த இசை வெளியீட்டு விழாவில், பிரபல நடிகைகளான, பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்ஷிகா, ஊர்வசி ரவுடேலா,யாஷிகா ஆனந்த், ராய் லக்ஷ்மி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி ஆகிய நடிகைகள் கலந்து கொள்கின்றார்கள். மொத்தம் பத்து ஹீரோயின்கள் கலந்து கொள்கிறார்கள்.
unknown nodeஇந்த நிலையில், இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய இந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறதாம். நாளை வெளியாகும் டிரைலரில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.