ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது...!

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்றுள்ளது.

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்றுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. மூன்று மொழிகளில் படம் வெளியான நிலையில், படம் பெரிய வெற்றியை பெற்று உலக அளவில் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் சாதனை புரிந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்றுள்ளது. 95வது ஆஸ்கர் விழாவுக்கும் ஒரிஜினல் பாடல் பிரிவின் இறுதி பட்டியலுக்கு ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வாகியுள்ளதையடுத்து, இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த விழா நடைபெறவுள்ளது.