சிவா மனசுல சக்தி 2 எடுக்க போறேன்! எம்.ராஜேஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்!
சிவா மனசுல சக்தி 2-படத்தை எடுப்பது பற்றி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் இயக்குனர் எம்.ராஜேஷ் மனம் திறந்த பேசியுள்ளார்.
சென்னை : 90ஸ் கிட்ஸ்கள் மறக்க முடியாத படங்களின் வரிசையில் பல படங்கள் இருக்கிறது. அதில் முக்கியமான படம் என்றால், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி படத்தைக் கூறலாம். இந்த படம் இன்று வரை பலருடைய பேவரைட் படமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்திற்கான இரண்டாவது பாகத்தையும் இயக்குநர் எடுக்கத் திட்டமிட்டு வருகிறார்.
படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கும் திட்டம் ஒன்று இருந்த காரணத்தால் படத்திற்கான திரைக்கதை எழுதவும் தொடங்கி இருக்கிறார். அதற்கு, முன்னதாக தன்னிடம் இப்படி ஒரு யோசனை இருப்பதாகவும் நடிகர் ஜீவாவிடம் பேசியுள்ளார். திரைக்கதை எழுதி முடித்த பிறகு ஜீவாவிடம் கூறுவார் எனக் கூறப்படுகிறது.
சிவா மனசுல சக்தி 2-படத்தை எடுப்பது பற்றி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் எம்.ராஜேஷ் உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் பேசியதாவது ” சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாவது பாகம் கண்டிப்பாக உருவாகும். படத்தைப் பற்றி ஜீவாவிடம் பேசியுள்ளேன். தற்போது படத்திற்கான கதை எழுதும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், சினிமாவில் ஒரு படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றியடைந்துவிட்டது என்றால் அடுத்ததாக, அதனுடைய இரண்டாவது பாகத்தை எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அப்படி இதுவரை தமிழ் சினிமாவில் பல படங்களுடைய இரண்டாவது பாகம் வந்து இருக்கிறது. அதில் ஒரு சில படங்கள் சுமாரான வெற்றி அடைந்திருந்தாலும் பெரிய அளவில் முதல் பாகத்தை மிஞ்சும் அளவுக்கு ஹிட் ஆகவில்லை.
இதன் காரணமாகவே, சில இயக்குநர்கள் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க யோசித்தும் வருகிறார்கள். ஒரு சில இயக்குநர் தைரியமாகக் கதை மீது நம்பிக்கை வைத்து இரண்டாவது பாகத்தை எடுத்து வருகிறார்கள். அப்படி தான் தற்போது எம்.ராஜேஷ் சிவா மனசுல சக்தி படத்தினை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.